December 12, 2024
தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Conservative கட்சியின் புதிய தலைவராக Pierre Poilievre தெரிவு செய்யப்பட்டார்.

சனிக்கிழமை (10) நடைபெற்ற கட்சி மாநாட்டில் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டார்.

மகாராணியின் மரணத்தின் பின்னர் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்தப் போட்டியில் Poilievre, முதல் சுற்று வாக்குப்பதிவில் வெற்றி பெற்றார்.

2004ஆம் Stephen Harper, முதல் சுற்றில் வெற்றி பெற்ற பின்னர், மீண்டும் முதல் சுற்றில் வெற்றி பெறும் முதல் Conservative கட்சியின் தலைவர் Poilievre ஆவார்.

புதிய தலைவர் அறிவிக்கப்பட்ட Poilievre, Harper, Andrew Scheer, Erin O’Toole ஆகியோருக்குப் பின்னர் கட்சியின் நான்காவது நிரந்தர தலைவராக இருப்பார்.

Conservative கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் Scott Aitchison, Pierre Poilievre, Leslyn Lewis, முன்னாள் Quebec முதல்வர் Jean Charest முன்னாள் Ontario மாகாண சபை உறுப்பினர் Roman Baber என ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் ஆறு ஆண்டுகளில் மூன்றாவது தலைமைப் போட்டியில் கடந்த ஏழு மாதங்களாக செலவிட்டனர்.

Related posts

July மாத இறுதியில் பாப்பரசர் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan

இளம் கனேடியர்களிடையே அதிகரிக்கிறது COVID19 தொற்றுக்களின் பாதிப்பு!

Gaya Raja

Ontarioவில் October மாதத்திற்குள் 9,000 நாளாந்த தொற்றுக்கள் பதிவாகலாம்!

Gaya Raja

Leave a Comment