February 22, 2025
தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் புதிய தலைவரை அறிவிப்பதற்கான திட்டங்களில் மாற்றம்?

Conservative கட்சியின் அடுத்த தலைவரை அறிவிப்பதற்கான திட்டங்களை மறு சீரமைப்பது குறித்து கட்சி ஆராந்து வருகிறது.

மகாராணியின் மரணம் Conservative கட்சி அடுத்த தலைவரை எப்படி அறிவிக்க திட்டமிட்டுள்ளது என்பதை மறுபரிசீலனை செய்ய தூண்டியுள்ளது.

சனிக்கிழமை (10) Ottawaவில் ஒரு நிகழ்வின் மூலம் கட்சி தனது புதிய தலைவரை அறிவிக்க திட்டமிட்டிருந்தது.

ஆனால் மகாராணியின் மரணம் காரணமாக கனடாவில் பல நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.

இந்த நிலையில் மகாராணியின் மரணம் தொடர்பான நெறிமுறைகளை கட்சி மதிக்கும் என கட்சியின் தலைமை தேர்தல் அமைப்புக் குழுவின் தலைவர் ஒரு அறிக்கையில் வியாழக்கிழமை (08) தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் கட்சியின் புதிய நிலைப்பாடு வெள்ளிக்கிழமை (09) நாளை மாலை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Related posts

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு

Lankathas Pathmanathan

கட்சியின் வருடாந்த மாநாட்டில் முதல்வரை விமர்சித்த Liberal தலைவர்

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தில் கண் கலங்கிய NDP தலைவர்!!

Gaya Raja

Leave a Comment