தேசியம்
செய்திகள்

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Saskatchewan மாகாணத்தில் நிகழ்ந்த கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணமடைந்துள்ளார்.

புதன்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்ட இவர், பின்னர் மரணமடைந்ததாக RCMP அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Saskatchewan மாகாணத்தில் பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து சம்பவங்களை அடுத்து சந்தேகத்தின் பேரில் 31 வயதான Damien Sanderson, 30 வயதான Myles Sanderson ஆகியோரை RCMP தேடி வந்தது.

இந்த நிலையில் சந்தேக நபர்களில் ஒருவரான Damien Sanderson சடலமாக திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டார்.

இரண்டாவது சந்தேக நபரான Myles Sanderson நாலு நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் புதன் மாலை கைதானார்.

Myles Sanderson சுயமாக ஏற்படுத்திய காயங்களின் விளைவாக இறந்தார் என தெரியவருகிறது.

ஆனாலும் இந்த தகவலை RCMP உறுதிப்படுத்த மறுத்துள்ளது

இதனை அடுத்து Saskatchewan மாகாணத்தில் ம் தொடர்ந்த அவசர கால நிலை நீக்கப்பட்டுள்ளது

இந்த கத்திக்குத்து தாக்குதலின் விளைவாக 11 பேர் இறந்துள்ளனர், 19 பேர் காயமடைந்துள்ளனர்.

காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட 17 பேரில் 10 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதாக Saskatchewan சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

தடுப்பூசி போட்ட மாணவர்களுக்கும் – போடாத மாணவர்களுக்கும் தனி விதிகள் இல்லை!

Gaya Raja

London வாகனத் தாக்குதல் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கோரிக்கை

Gaya Raja

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment