தேசியம்
செய்திகள்

அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: பிரதமர் Justin Trudeau

வன்முறை, மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்தார்.

நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland Albertaவில் ஒரு நபரினால் துரோகி என அழைக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை வெளியிட்ட நிலையில் பிரதமரின் இந்த கோரிக்கை வெளியானது.

Freeland எதிர்கொண்டது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வல்ல எனவும், பொது வாழ்வில் உள்ளவர்கள், குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினரால் அதிகம் எதிர்கொள்ளப்படும் சவால் இதுவெனவும் Trudeau கூறினார்.

அச்சுறுத்தல்கள், வன்முறைகள், மிரட்டல்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என கூறிய Trudeau, இந்த வகையான கோழைத்தனமான நடத்தை நமது ஜனநாயகம், மதிப்புகளை அச்சுறுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

கனடாவில்  அதிகமான பெண்கள், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிறுபான்மை இனத்தவர்கள் அரசியலிலும்  ஊடகங்களிலும் வலுவான குரல்களாக இருக்க வேண்டும் என பிரதமர் Trudeau கூறினார்.

Related posts

அமெரிக்காவின் AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா அனுமதி

Gaya Raja

நாளை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

Lankathas Pathmanathan

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பேரூந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் மரணம் – ஆறு பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment