எதிர்வரும் நகரசபை தேர்தலில் Torontoவில் 372 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (19) மதியம் 2 மணிவரை பதிவான 372 வேட்புமனுக்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதில் 31 பேர் நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
நகர முதல்வர் பதவிக்கு John Tory மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மூன்றாவது முறையாக நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நகரசபை உறுப்பினர் பதவிக்கு 164 பேரும், கல்விசபை உறுப்பினர் பதவிக்கு 177 பேரும் போட்டியிடுகின்றனர்.
Ward 1- Etobicoke வடக்கு தொகுதியில் அதிக வேட்பாளர்கள் (16) பதிவாகியுள்ளனர்
கடந்த 2018 தேர்தலுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்தமாக இந்த மாநகராட்சித் தேர்தலில் கணிசமான அளவு குறைவான வேட்பாளர்களே உள்ளனர். 2018இல் 501 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர் (நகர முதல்வர் பதிவிக்கு 35, நகரசபை உறுப்பினர் பதிவிக்கு 242, கல்வி சபை உறுப்பினர் பதிவிக்கு 224).
இம்முறை மூன்று கல்விசபை உறுப்பினர் பதவிக்கு தலா ஒரு வேட்பாளர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Ontarioவில் உள்ள நகரசபை தேர்தல் விதிகளின்படி, August 2 மாலை 4 மணிவரை, ஒரு வேட்பாளர் மட்டுமே ஒரு தொகுதியில் போட்டியிட சான்றளிக்கப்பட்டால், அந்த வேட்பாளர் முறைப்படி உறுப்பினராக தேர்தலின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்.