கனடா முழுவதும் நான்கு புதிய கடவுச்சீட்டு சேவை மையங்களை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சமூக மேம்பாட்டு அமைச்சர் Karina Gould புதன்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
Alberta, Ontario, Quebec, P.E.I ஆகிய மாகாணங்களில் இந்த புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.
கடவுச்சீட்டு விண்ணப்பங்களில் ஏற்படும் தாமதங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.
இது கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஐந்து புதிய கடவுச்சீட்டு சேவை மையங்களுக்கு மேலானதாகும் .
மேலும் ஏழு முதல் ஒன்பது புதிய சேவை மையங்கள் விரைவில் திறக்க திட்டமிடுவதாக அமைச்சர் Gould தெரிவித்தார்.