கனடாவின் போக்குவரத்து அமைச்சருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் Omar Alghabra செவ்வாய்க்கிழமை (16) உறுதிப்படுத்தினார்.
தான் சுயமாக தனிமைப்படுத்தும் போது அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றுவேன் என அவர் செவ்வாய் மாலை ஒரு Twitter பதிவில் குறிப்பிட்டார்.
நான் தடுப்பூசிகளை பெற்றதற்கும், தனது அறிகுறிகள் இலேசானவை என்பதற்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனவும் அமைச்சர் Alghabra குறிப்பிட்டார்.