தேசியம்
செய்திகள்

B.C. புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழர் போட்டி

British Colombia மாகாண புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவிக்கு தமிழரான அஞ்சலி அப்பாத்துரை போட்டியிடுகின்றார்.

காலநிலை ஆர்வலரான இவர் NDP தலைமைப் போட்டியில் ஈடுபடும் தனது முடிவை புதன்கிழமை (10) அறிவித்தார்.

தனது பிரச்சாரம் சுற்றுச்சூழல், வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு, சமூகங்களைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தும் என 32 வயதான அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில், அவர் Vancouver Granville தொகுதியில் NDP வேட்பாளராக போட்டியிட்டார்.

அவர் 500 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

Related posts

கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் உரையாடல்!

Gaya Raja

குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய முதலாவது தடுப்பூசி Pfizerரின் ஆகலாம்: கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்

Gaya Raja

இரத்தம் சிந்துவது குறித்த அச்சம்: தொடரும் அவசரகாலச் சட்டம் குறித்த விசாரணை

Lankathas Pathmanathan

Leave a Comment