கடந்த ஆண்டு நடைபெற்ற கனடிய பொது தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமரை அச்சுறுத்தியதற்கான குற்றத்தை ஒருவர் ஒப்புக் கொண்டார்.
32 வயதான Thomas Dyer என்ற Kitchener நகரத்தை சேர்ந்த நபர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.
கடந்த வருடம் August மாதம் 29 ஆம் திகதி Cambridge நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டை Waterloo பிராந்திய அரச வழக்கறிஞர் அலுவலகத்தின் உதவி வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.
Justin Trudeauவுக்கு மரண அச்சுறுத்துல் விடுத்த குற்றச்சாட்டை கடந்த வாரம் Dyer ஒப்புக் கொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.