February 12, 2025
தேசியம்
செய்திகள்

புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்71 வீடுகள் சேதம்

Ontario மாகாணத்தின் Vaughan நகரில் புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 71 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சீர்படுத்த முடியாத வெப்ப சேதம் காரணமாக இந்த வீடுகளில் பல இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக Vaughan தீயணைப்பு, மீட்பு சேவையின் துணை தீயணைப்புத் தலைவர் தெரிவித்தார்.

புதன்கிழமை (12) ஏற்பட்ட இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இதில் காயமடைந்த ஒரு தீயணைப்பு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தவிரவும் பொதுமக்கள் எவரும் இந்த தீ காரணமாக காயமடையவில்லை.

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

உக்ரைன் போர்: மேலும் 22 பேர் கனடாவால் தடை

300 சதவீதம் அதிகரித்த ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள்

Lankathas Pathmanathan

பெயர் மாற்றம் பெறும் Ryerson பல்கலைக்கழகம்  

Lankathas Pathmanathan

Leave a Comment