December 12, 2024
தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் அடுத்த தலைமை விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை: Leslyn Lewis

Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களின் கட்டாய விவாதத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என Leslyn Lewis வியாழக்கிழமை (28) அறிவித்தார்.

இந்த விவாதத்தில் கலந்து கொள்வதற்கான பிரச்சாரத் திட்டங்களை மறுசீரமைக்க வேட்பாளர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என புதன்கிழமை Lewis கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்த தனது நிலைப்பாடு அடங்கிய கடிதம் ஒன்றை அவர் புதன்கிழமை கட்சியின் தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்பியிருந்தார்.

இந்த அதிகாரப்பூர்வ விவாதத்தில் கலந்து கொள்ளத் தவறியதற்காக Lewisக்கு எதிராக 50 ஆயிரம் டொலர் அபராதம் விதிக்கப்படும்.

மற்றுமொரு வேட்பாளர் Pierre Poilievreரும் இந்த விவாதத்தை தவிர்க்கின்றார்.

Ottawaவில் எதிர்வரும் புதன்கிழமை இரு மொழிகளில் இந்த விவாதம் நடைபெற உள்ளது.

Related posts

வேலை நிறுத்தத்தில் கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள்!

Gaya Raja

மற்றொரு பகுதியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒன்ராறியோ

Gaya Raja

OPP அதிகாரியின் இறுதிக் கிரியைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment