தேசியம்
செய்திகள்

உக்ரைன் போரில் பங்கேற்ற கனேடியர் மரணம்!

உக்ரைனில் அண்மையில் உயிரிழந்த கனேடியர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உக்ரைனின் ஆயுதப் படைகளுக்குள் ஒரு சிறப்பு நடவடிக்கை குழுவின் ஒரு பகுதியாக இருந்த “Beaver” என்ற புனைப்பெயர் கொண்ட தன்னார்வ போராளியாக இவர் அடையாளம் காணப்பட்டார்.

Quebec மாகாணத்தை சேர்ந்த 31 வயதான Emile-Antoine Roy-Sirois என்ற கனடியரான இவர் உக்ரைனில், ரஷ்யப் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டார்..

இவர் கடந்த வாரம் கிழக்கு உக்ரைனின் ரஷ்ய படையினரால் தாக்கப்பட்டபோது, மேலும் மூன்று வெளிநாட்டு போராளிகளுடன் மரணமடைந்ததாக அவர்களது பிரிவு தளபதி உறுதிப்படுத்தினார்.

உக்ரைனில் ஒரு கனடியர் இறந்ததை ஞாயிற்றுக்கிழமை (24) கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தூதரக அதிகாரிகள் மரணமடைந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர் என கூறிய அமைச்சு தனிநபர் உரிமை காரணமாக மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

Related posts

கனடாவில் 26 Monkeypox தொற்றுக்கள் உறுதி!

Québec மாகாண வாகன விபத்தில் 5 பேர் பலி

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த ஆக்கபூர்வமான உரையாடல்கள் தொடர்கின்றன

Lankathas Pathmanathan

Leave a Comment