February 23, 2025
தேசியம்
செய்திகள்

இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட கனேடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட கனேடிய அரசாங்கத்திடம் தமிழ் உரிமைக் குழு மீண்டும் கோரியுள்ளது.

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என கனடிய அரசாங்கத்திடம் கடந்த புதன்கிழமை (20) நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை வரவேற்பதாக தமிழ் உரிமைக் குழு வெள்ளிக்கிழமை (22) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கான நீதி போராட்டத்திற்கு உதவ வேண்டுமென கனடிய அரசாங்கத்தை தமிழ் உரிமைக் குழு கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞரின் அலுவலகத்திற்கு ரோம சாசனத்தின் 15வது பிரிவின் கீழ் வழங்கிய தனது தகவல் தொடர் பாடலுக்கு ஆதரவாக நாடாளுமன்ற விண்ணப்பம் ஒன்றை தமிழ் உரிமைக் குழு கனடிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது இங்கு குறிப்பிடத்தக்கது .

Related posts

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

மீண்டும் உயரும் பாலின் விலை

பசுமை கட்சியின் சார்பில் பெண் தமிழ் வேட்பாளர்

Leave a Comment