விமானப் பயணிகளுக்கான எழுந்தமான COVID பரிசோதனை நான்கு பெரிய கனடிய விமான நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (19) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
Toronto, Vancouver, Calgary, Montreal ஆகிய விமான நிலையங்கள் ஊடாக கனடாவிற்கு வரும் விமானப் பயணிகளில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கட்டாய COVID சோதனையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்த சோதனைகள் விமான நிலையங்களுக்கு வெளியே முன்னெடுக்கப்படும் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.
புதிய தொற்றின் மாறுபாடுகளைக் கண்டறிவதற்கு இந்த சோதனைகள் முக்கிய வழியாகும் என கனடாவின் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி ஏற்கனவே கூறியிருந்தார்.
விமானப் பயணிகளுக்கான எழுந்தமான COVID பரிசோதனை நடவடிக்கை ஒரு மாதத்திற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.