Toronto பெரும்பாகத்தில் உள்ள ஒரு குழந்தைகள் தின பராமரிப்பு ஊழியரான தமிழர், இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளை தாக்கி தரையில் இழுத்துச் சென்றதற்கான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
52 வயதான மக்தலீன் வசந்தகுமார் என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது.
Milton நகரில் உள்ள BrightPath Maple என்ற குழந்தைகள் தின பராமரிப்பு நிலையத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.
Milton நீதிமன்றத்தில், அவர் தன் மீதான ஐந்து தாக்குதல் குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிபதி அவரு சிறை தண்டனையை விதிக்காத போதிலும்,15 மாத நிபந்தனை தண்டனை வழங்கியுள்ளார்.