கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல நேரடி உரையாடலில் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy புதன்கிழமை (22) பங்கேற்றார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி நான்கு மாதங்களாகும் நிலையில் இந்த நிகழ்வை Toronto பல்கலைக்கழகத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான Munk பாடசாலை ஏற்பாடு செய்திருந்தது.
உக்ரைனின் நிதி உதவி, மனிதாபிமான உதவி, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து இந்த உரையாடலின் போது Zelenskyy விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் உக்ரைனின் எதிர்காலம் முதல் யுத்தம் குறித்த பொதுக் கருத்தை இணையம் எவ்வாறு வடிவமைக்கிறது என்பது வரை கனேடிய மாணவர்கள் கேள்விகளை முன்வைத்தனர்.