தேசியம்
செய்திகள்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Andrea Horwath போட்டியிடலாம்

Hamilton நகர முதல்வர் பதவிக்கு Ontario NDP கட்சியின் முன்னாள் தலைவர் Andrea Horwath போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Hamilton நகர முதல்வர் Fred Eisenberger திங்கட்கிழமை (20) அறிவித்தார்.

இந்த நிலையில் Horwath இந்த பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

13 ஆண்டுகள் Ontario NDP கட்சியின் தலைமையில் இருந்த Horwath இம்முறை மாகாண தேர்தல் தோல்வியின் பின்னர் பதவி விலகினார்.

Hamilton நகரசபை தேர்தல் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட தயாராக இல்லை என திங்களன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Horwath கூறினார்.

மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிவு செய்வதற்கான காலக்கெடு August மாதம் 19ஆம் திகதி நிறைவடைகிறது.

Related posts

$34.5 மில்லியன் மதிப்புள்ள 600 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan

COVID-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன – Extended supports for businesses impacted by COVID-19

Lankathas Pathmanathan

Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

Gaya Raja

Leave a Comment