December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்து வருகிறது: கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்துவருவதாக கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.

COVID தொற்றின் போது கனடாவின் சுகாதார பராமரிப்பு அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் அவர் கூறினார்.

கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் Dr. Katharine Smart இதனை தெரிவித்தார்.

இந்த நிலை மோசமடையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய சுகாதாரப் பாதுகாப்பு முறையின் சரிவு தெளிவாக வருவதாக கூறிய அவர், இதனை தீவிரமாக கையாள்வதற்கான அரசியல் விருப்ப நிலை இல்லை எனவும் கூறினார்.

இந்த அழுத்தம் பயங்கரமானது என அவர் எச்சரித்தார்.

அண்மை காலத்தில் இதற்கான தீர்வுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் சுட்டிக்காட்டிய அவர் இது மிகவும் கவலையளிக்கும் விடயமாக குறிப்பிடுகின்றார்.

Related posts

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

மீண்டும் அதிகரிக்கும் வட்டி  விகிதம்?

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியை தலைமை தாங்கிய முதல் பெண் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment