December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது

கனடா மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து  1.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தவுள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகிறது.
இரண்டு சதவீத பணவீக்க இலக்கை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய தேவைப்பட்டால் மிகவும் வலுவாக செயல்பட தயாராக உள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

March 2020ஆம் ஆண்டு  முதல் அதன் முக்கிய வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கு அருகில் வைத்திருந்த மத்திய வங்கி, இந்த வருடத்தின் March, April மாதங்களில் வட்டி விகித உயர்வை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை வரும் மாதங்களில் மேலும் சில வட்டி விகித அதிகரிப்பு வெளியாகும் எனவும் எதிர்வு  கூறப்படுகின்றது.

Related posts

A.L. wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Blue Jays தோல்வி

Lankathas Pathmanathan

British Colombia முதல்வருக்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

பதவி விலகுவது குறித்து எண்ணினேன்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment