தேசியம்
செய்திகள்

Quebecகில் 52 பேர் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Quebec சுகாதார அமைச்சகம் 52 பேர் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

புதன்கிழமை (01) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கியூபெக்கில் monkeypox காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த அரிதான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கு தடுப்பூசி வழங்க தொடங்கிய கனடாவின் முதல் மாகாணமாக Quebec அமைந்துள்ளது.

புதன்கிழமை Toronto அதன் இரண்டாவது monkeypox தொற்றை உறுதிப்படுத்தியதுடன் மேலும் சில சந்தேகத்திற்கிடமான தொற்றுக்களை உறுதிப்படுத்தியது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில், 30 நாடுகளில் 550க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுகள் உள்ளன.

Related posts

Durham இடைத் தேர்தலில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

Markham நகரில் வாகனம் மோதியத்தில் தமிழர் ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

நான்கு புதிய கடவுச்சீட்டு சேவை மையங்கள் திறப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment