கனடிய மத்திய வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக வியாழக்கிழமை (02) மற்றுமொரு பெரிய வட்டி விகித அதிகரிப்பை கனடிய மத்திய வங்கி அறிவிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
March 2020ஆம் ஆண்டு முதல் அதன் முக்கிய வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கு அருகில் வைத்திருந்த மத்திய வங்கி, இந்த வருடத்தின் March, April மாதங்களில் வட்டி விகித உயர்வை வெளியிட்டது.
இதில் April மாதம் அறிவிக்கப்பட்ட அரை சதவீதம் புள்ளி அதிகரிப்பு, வழக்கத்திற்கு மாறாக பெரிய அதிகரிப்பாகும்.
இந்த வாரம் மீண்டும் ஒரு அரை சதவீதம் புள்ளி அதிகரிப்பை அறிவிப்பதன் மூலம் வட்டி விகிதத்தை 1.5 சதவீதமாக அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது.
அதேவேளை வரும் மாதங்களில் மேலும் சில வட்டி விகித அதிகரிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகின்றது.
1990களின் முற்பகுதியின் பின்னர், வேகமான அதிகரிப்பில் இயங்கும் பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியை இந்த நகர்வுகள் குறிக்கின்றன.