கடந்த March மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை எட்டியதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனடா முழுவதிலும் உள்ள வேலை வெற்றிடங்கள் March மாதத்தில் எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது.
இது ஐந்து மாத சரிவை முடிவுக்குக் கொண்டு வந்ததாக புள்ளி விபரத் திணைக்களம் வியாழக்கிழமை (26) தெரிவித்துள்ளது.
March மாத ஆரம்பத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப நிறுவனங்கள் முயன்றதாக நிறுவனம் புள்ளி விபரத் திணைக்களம் கூறியது.
இது February மாதத்தில் இருந்து 22.6 சதவீதமும் முந்தைய ஆண்டை விட 60.5 சதவீதமும் அதிகரிப்பாகும்.
அனைத்து மாகாணங்களிலும் வேலை வெற்றிடங்கள் அதிகரித்துள்ள அதேவேளை Saskatchewan, Nova Scotia, Newfoundland and Labrador ஆகிய மாகாணங்களில் மிகப்பெரிய அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளது.