Ontario மாகாண தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வியாழக்கிழமை (19) முதல் ஆரம்பமானது.
தேர்தல் தினம் எதிர்வரும் 2ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், வியாழன் முதல் முன்கூட்டிய வாக்களிப்பில் பங்கேற்கலாம் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிப்பு நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.