தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

பொருளாதாரம், சுகாதாரம் ஆகியன முக்கிய இடம் பிடித்த கட்சி தலைவர்களின் விவாதம்

Ontarioவில் எதிர்கொள்ளப்படும் பொருளாதார சவால்கள், சுகாதாரம் ஆகியன அரசியல் கட்சி தலைவர்களின் விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தன.

Ontario மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

வீட்டு வசதி திட்டங்கள், நெடுந்தெரு 413, சுகாதார திட்டங்கள், COVID, கல்வி, பாடசாலையில் வன்முறைகள், தலைமைத்துவம், பருவநிலை மாற்றம் ஆகிய விடயங்கள் குறித்து கட்சி தலைவர்கள் விவாதித்தனர்.

இன்றைய விவாதத்தின் போது, பொது கலவி, உடல்நலப் பாதுகாப்பு போன்ற வியங்களில் முதல்வர் Fordஇன் நகர்வுகளை ஏனைய கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்

தேர்தலுக்கு17 தினங்கள் மாத்திரம் உள்ள நிலையில் இந்த விவாதம் நடைபெற்றது.

90 நிமிடங்கள் நிகழ்ந்த தொலைக்காட்சி விவாதத்தில் Progressive Conservative கட்சி தலைவர் Doug Ford, NDP தலைவர் Andrea Horwath, Liberal கட்சி தலைவர் Steven Del Duca, பசுமை கட்சி தலைவர் Mike Schreiner ஆகியோர் பங்கேற்றனர்.

Ontario மாகாண தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது.

இம்முறை பத்து தினங்கள் முன்கூட்டியே வாக்களிப்பு இடம்பெறும்

வாக்காளர்கள் அஞ்சல் மூலமாகவும் வாக்களிக்கலாம் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

Related posts

Quebecகில் சுகாதாரப் பணியாளர்களும் சமூக சேவை தொழிலாளர்களும் தடுப்பூசி பெறுவதற்கு காலக்கெடு!

Gaya Raja

Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக கனேடிய தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Gaya Raja

வாகன திருட்டு விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட 119 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment