Ontario மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (16) நடைபெறவுள்ளது.
தேர்தல் தினத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ள நிலையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
90 நிமிடங்கள் நிகழும் இந்த தொலைக்காட்சி விவாதத்தில் நான்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள்.
Liberal கட்சி தலைவர் Steven Del Duca, Progressive Conservative கட்சி தலைவர் Doug Ford, NDP தலைவர் Andrea Horwath, பசுமை கட்சி தலைவர் Mike Schreiner ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
Ontario மாகாண தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவு May மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகும்.
வாக்காளர்கள் அஞ்சல் மூலமாகவும் வாக்களிக்கலாம் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.