உக்ரேனிய அகதிகளை அழைத்து வருவதற்காக மூன்று விமானங்களை வாடகைக்கு அமர்த்த கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கனடிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த விமானங்கள் போலந்தில் இருந்து மூன்று கனேடிய நகரங்களுக்கு பயணிகவுள்ளது.
May 23ஆம் திகதி ஒரு விமானம் Winnipeg நகருக்கும், May 29 ஆம் திகதி ஒரு விமானம் Montreal நகருக்கும், June 2ஆம் திகதி ஒரு விமானம் Halifax நகருக்கும் பயணிக்கவுள்ளன.
ஒரு விமானத்திற்கு 300 பேர் என சுமார் 900 உக்ரேனியர்கள் இந்த விமானங்களில் கனடாவை வந்தடைவார்கள் என கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை (12) காலை மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது.