உக்ரைனில் நிகழும் கொடூரமான போர்க் குற்றங்களுக்கு Vladimir Putin பொறுப்பு என்பது தெளிவாகிறது என பிரதமர் Justin Trudeau கூறினார்.
Trudeau ஞாயிற்றுக்கிழமை (08) உக்ரைனுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அங்கு கனேடிய தூதரகத்தை மீண்டும் திறந்ததுடன், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyயையும் Trudeau சந்தித்தார்.
ரஷ்ய படையெடுப்புக்கு மத்தியில் மேற்கொண்ட இந்த பயணத்தின் போது உக்ரைனுக்கு கனடாவின் ஆதரவை பிரதமர் வெளிப்படுத்தினார்.
Zelenskyy உடன் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், கனடா உக்ரைனுக்கு அதிக இராணுவ உதவிகளை வழங்கும் என Trudeau உறுதியளித்தார்.
Putinனின் நடவடிக்கைக்கு பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
40 ரஷ்ய தனிநபர்கள், ஐந்து நிறுவனங்கள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளையும் Trudeau அறிவித்தார்.
Kyivவில் உள்ள கனேடிய தூதரகத்தை மீண்டும் திறப்பதாகவும் Trudeau அறிவித்தார்.
இந்த பயணத்தில், Trudeauவுடன் துணைப் பிரதமர் Chrystia Freeland, வெளியுறவு அமைச்சர் Melanie Joly ஆகியோர் பயணித்தார்கள்.