தேசியம்
செய்திகள்

6 மில்லியன் டொலர் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் கைது

6 மில்லியன் டொலர் பெறுமதியான சட்டவிரோத கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் பல குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Kawartha Lakes நகரில் 6 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சட்டவிரோத கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட விசாரணையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

April மாதம் 21ஆம் திகதி மூன்று குடியிருப்கள், இரண்டு வாகனங்கள் மீது OPP முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

60 வயதான Kawartha Lakes நகரை சேர்ந்த Thomas Kurely, 26 வயதான Bolton நகரை சேர்ந்த கபிலன் அனுரா, 27 வயதான Claremont நகரை சேர்ந்த தனோஜா தர்மகுலசேகரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் 13 குற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

இவர்கள் May மாதம் 19 ஆம் திகதி Oshawa நீதிமன்றத்தில் முன்னிலைப்படுவார்கள்.

Related posts

வார இறுதியில் முன்கூட்டிய வாக்குப்பதிவு!

Gaya Raja

கனடிய செய்திகள் – October மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan

NDP வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்: Jagmeet Singh

Leave a Comment