தேசியம்
செய்திகள்

Pickering சூதாட்ட மைய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Pickering நகர சூதாட்ட மையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புக் காவலர் உயிரிழந்தார்.

திங்கட்கிழமை (09) அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர் 34 வயதான Michael Ferdinand என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சில ஆண்களையும் பெண்களையும் தேடி வருவதாக Durham பிராந்திய காவல்துறையினர் கூறினர்.

மறு அறிவித்தல் வரை Pickering சூதாட்ட மையம் “தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து Pickering சூதாட்ட மையம் விவரம் எதையும் வெளியிடவில்லை.

Related posts

Januaryயில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம்25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்

Gaya Raja

Leave a Comment