February 21, 2025
தேசியம்
செய்திகள்

தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் கைது

தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ்  இளைஞரை  York பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவர் கைதாகியுள்ளார்.

Markham massage நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாள படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த 8ஆம் திகதி நிகழ்ந்தது.

கைது செய்யப்பட்டவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பதை York காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

இனிவரும் காலத்தில்  இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (29)  இவரது புகைப்படத்தை வெளியிட்டனர்.

 இவர் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லை குறைகிறது

Gaya Raja

British Colombiaவில் தொடரும் அவசர கால நிலை

Lankathas Pathmanathan

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார்: பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment