December 12, 2024
தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண தேர்தல் பிரச்சார வரவு செலவு திட்டம் வெளியீடு

Ontarioவின் உள்கட்டமைப்புக்கு பில்லியன் டொலர்களை உறுதியளிக்கும் வரவு செலவு திட்டம் வியாழக்கிழமை(28) அறிவிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் Peter Bethlenfalvy வியாழன் மாலை Ontario சட்டசபையில் இந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார்.

Doug Ford அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரமாக இந்த வரவு செலவு திட்டம் அமைகிறது.

Ontarioவின் உருவாக்கத் திட்டம் என்ற 241 பக்கங்கள் கொண்ட இந்த வரவு செலவு திட்டம் 198 பில்லியன் டொலர்களை உள்ளடக்கியது.

Ontarioவின் அதிக பணவீக்கம் 2023ஆம் ஆண்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என இன்றைய வரவு செலவு திட்டத்தில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Ontarioவின் பற்றாக்குறை இந்த ஆண்டு 19.9 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என இந்த வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு அடுத்த மாகாணத் தேர்தல் நடைபெறும் போது மாகாணம் சமநிலைக்கு திரும்பும் எனவும் நிதியமைச்சர் எதிர்வு கூறினார்.

Ontario மாகாண சபை தேர்தல் June மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த வரவு செலவு திட்டம் வெளியானது.

சமீபத்திய வாரங்களில் முதல்வர் Ford, அவரது அமைச்சரவை அறிவித்த பல திட்டங்களை இந்த வரவு செலவு திட்டம் உள்ளடக்கியிருந்தது.

PC கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேர்தலின் பின்னர் இதே வரவு செலவு திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தும் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மோசமடையும் COVID நிலை – அவரசமாக கூடும் Ontario அமைச்சரவை

Lankathas Pathmanathan

2025ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 புதிய குடிவரவாளர்களுக்கு அனுமதி

Lankathas Pathmanathan

20 முதல் 25 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

Leave a Comment