தேசியம்
செய்திகள்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் கோரவுள்ள Moderna

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி அனுமதியை Health கனடாவிடம் பெற Moderna தயாராகி வருகிறது.

இந்த வயதெல்லைக்கான தடுப்பூசியின் ஒப்புதலை Health கனடாவிடம் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக Moderna வியாழக்கிழமை (28) கூறியது.

இதுவரை, Health கனடா ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான mRNA COVID தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகரித்துள்ளது.

இதேவேளை Modernaவின் புதிய தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை ஒன்று Montreal  நகரில் அமைக்கப்படவுள்ளது.

இது குறித்த அறிவித்தல் வெள்ளிக்கிழமை (29) வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontario, Quebec மாகாணங்களில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

ஹமாசின் தாக்குதலில் காணாமல் போன இறுதி கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

மீண்டும் ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment