கனடாவில் COVID தொற்றின் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது.
செவ்வாய்க்கிழமை (26) மாலை 6 மணி வரை 38,901 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.
அதேவேளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் ஆறாயிரத்தும் அதிகமானவர்கள் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய் மாலை 6 மணிவரை 6,412 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன .
கடந்த 14 நாட்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56 சதவீதமும் அதிகரித்துள்ளது