February 22, 2025
தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட, தடுப்பூசி போடப்படாத, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கான COVID  எல்லை விதிகளை எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் கனடா மாற்றுகிறது.

ஐந்து முதல் 11 வயது வரையிலான தடுப்பூசி போடப்படாத, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு இனி கனடாவில் நுழைவதற்கு COVID சோதனை தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

April 25 அதிகாலை 1 மணி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஆசிரியருடன் வரும் இந்த வயதினருக்கு இனி COVID  நுழைவுக்கு முந்தைய பரிசோதனைகள்  அவசியமில்லை என வெள்ளிக்கிழமை (22) அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், தற்போது கனடாவுக்குள் நுழைய தகுதியுடைய 12 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட அல்லது தடுப்பூசி போடப்படாத பயணிகளுக்கு முன்-நுழைவுச் சோதனைகள் தேவைப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் COVID பரிசோதனை முடிவை வழங்க வேண்டிய அவசியமில்லை என அரசாங்கம் மேலும் கூறியுள்ளது.

Related posts

PCR சோதனை விடயத்தில் கனடா நெருக்கடியில் உள்ளது: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

Beijing ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

RCMP அதிகாரி வீதி விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment