COVID தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.
வியாழக்கிழமை (21) மாலை 7 மணி வரையிலான தரவுகள் அடிப்படையில் 5 ஆயிரத்து 711 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை கடந்த 14 தினங்களில் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேவேளை தொற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 288 ஆக பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கையும் கடந்த 14 தினங்களில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.