தேசியம்
செய்திகள்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

கடவுச் சீட்டுகளுக்கான  விண்ணப்பங்களில் எதிர்கொள்ளப்படும்  அதிகரிப்பு நீண்ட காத்திருப்பு காலத்தை உருவாகியுள்ளதாக Service கனடா கூறியுள்ளது.

மீண்டும் பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள ஆர்வம், கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை  மும்மடங்காக அதிகரித்துள்ளது.

பொது சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வெளிநாட்டு  பயணம் மீண்டும் ஆரம்பித்துள்ளதால்  நாடு முழுவதும் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக Service கனடா பேச்சாளர் தெரிவித்தார்.

April 1, 2020 முதல் March 31, 2021 வரையிலான காலப்பகுதியில் Service கனடா முந்நூற்று அறுபத்து மூவாயிரம்  கடவுச்சீட்டுகளை வழங்கியது.

இந்த எண்ணிக்கை  April 1, 2021 முதல்  March 31, 2022 வரை ஒரு மில்லியன், இருநூற்று எழுபத்து மூவாயிரமாக ஆக அதிகரித்தது.

Related posts

COVID: நாளாந்த தொற்று எண்ணிக்கை 60,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan

இரண்டரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment