தேசியம்
செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை Ontarioவில் 3,000ஐ தாண்டலாம் !

Ontario மாகாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 3,000ஐ தாண்டும் என புதிய modelling தரவுகள் குறிப்பிடுகின்றன.

COVID தொற்றின் சமூகப் பரவல் Ontarioவில் உச்சத்தை எட்டியிருக்கலாம் என வியாழக்கிழமை (14) வெளியான தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில காலத்திற்கு தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை கடந்த குளிர்காலத்தில் தொற்றின் ஐந்தாவது அலையின் உச்சத்தின் போது எதிர்கொண்ட நிலையை அடையலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

May மாதத்திற்குள் 4,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை தோன்றலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்,

கடந்த January நடுப்பகுதியில் தொற்றுடன் 4,183 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Text மோசடிகள் அதிகரித்துபதாக CRTC எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

NATO தலைவர் கனேடிய Arctic பாதுகாப்பு தளத்திற்கும் பயணம்

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை முதல் ஆரம்பமான கனடாவின் புதிய எல்லை விதிகள்!

Gaya Raja

Leave a Comment