இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை, உள்நாட்டு அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த கருத்தை தனது Twitter பக்கத்தில் வெளியிட்டார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை மதிக்க வேண்டியது அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த கடினமான காலங்களில் இலங்கைதீவின் மக்களுடன் கனடா ஆதரவாக உள்ளது என அமைச்சர் Joly கூறினார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்கள் அதிக அளவு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கடந்த வாரம் கனடிய அரசாங்கம் எச்சரித்திருந்தது.
இலங்கைக்கான பயண ஆலோசனை ஒன்றை கனடிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது