உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது செய்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உதவ RCMP அதிகாரிகளை அனுப்புவதாக கனேடிய அரசாங்கம், செவ்வாய்க்கிழமை (29) அறிவித்தது.
இந்த RCMP அதிகாரிகளின் குழு முடிந்தவரை விரைவாக அனுப்பப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino செவ்வாயன்று தெரிவித்தார்.
உக்ரைன் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ரஷ்யாவை பொறுப்பேற்கும் பணியை மேற்கொள்வதற்கான குழுவின் சிறப்பு உறுப்பினர்களாக இவர்கள் இருப்பார்கள் என அமைச்சர் கூறினார்.
ICCயின் வழக்கறிஞர் அலுவலகத்தின் கோரிக்கையை தொடர்ந்து, தற்போதைய விசாரணைகளில் கனடாவின் பங்களிப்பு குறித்து Mendicino அறிவித்தார்.
RCMP ஏற்ககனவே மூன்று புலனாய்வாளர்களை ICCக்கு அனுப்பியுள்ளது.
செவ்வாயன்று வெளியான அறிவித்தலின் பின்னர் இந்த எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கும்.