தேசியம்
செய்திகள்

இறுதி அறிக்கையை வெளியிட்டார் David Johnston

கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த இறுதி அறிக்கையை David Johnston திங்கட்கிழமை தாக்கல் செய்தார்.

இதன் மூலம் சிறப்பு அறிக்கையாளராக அவரது சர்ச்சைக்குரிய பதவி காலம் முடிவுக்கு வருகிறது.

இந்த மாத ஆரம்பத்தில் David Johnston தனது பணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

தனது பதவியைச் சுற்றியுள்ள சூழ்நிலை பாகுபாடானது என அவர் தனது பதவி விலகலுக்கான காரணமாக தெரிவித்தார்.

இறுதி அறிக்கையை வெளியிட்டவுடன் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

David Johnston அவரது பதவியில் இருந்து விலகுவதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

கனேடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து பொது விசாரணைக்கு அழைப்பு விடுப்பதற்கு எதிராக David Johnston பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan

உச்ச நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற நீதிபதி Russell Brown முடிவு

Lankathas Pathmanathan

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment