தேசியம்
செய்திகள்

மீண்டும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள John Tory

தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக John Tory வெள்ளிக்கிழமை (25) அறிவித்தார்.
எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை வெள்ளியன்று Tory வெளியிட்டார்.
67 வயதான Tory,  2014ஆம் அண்டு முதல் தடவையாக Toronto நகர முதல்வராக தெரிவானார்.
இரண்டு தடவைகள் மாத்திரமே நகர முதல்வர் பதவியில் இருக்க விரும்புவதாக முதலில் தெரிவித்த அவர், அண்மைய காலங்களில் மூன்றாவது தடவையாக தேர்தலில் ஈடுபடும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
Torontoவை வழிநடத்துவதை விரும்புவதாகவும், நகரத்தின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற விரும்புவதாகவும் Tory கூறினார்.

தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை தொடர்வதே மீண்டும் தேர்தலை நாடுவதற்கான காரணம் என Tory தெரிவித்தார்.

Related posts

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja

2023 Davis கோப்பை தரவரிசையில் Group A பிரிவில் முதலாவது நாடாக கனடா

Lankathas Pathmanathan

முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!

Lankathas Pathmanathan

Leave a Comment