February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebecகில் ஒவ்வொருவருக்கும் $500 கொடுப்பனவு

Quebec மாகாணத்தின் 2022-23 நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டம் செவ்வாய்க்கிழமை (22) சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்வரும் October மாதம் Quebec மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதியமைச்சர் Eric Girard தனது நான்காவதும் தேர்தலுக்கு முன்னதாக இறுதி வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தார்.

Quebec அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் இந்த நிதியாண்டில் 6.5 பில்லியன் டொலர் பற்றாக் குறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த வசந்த கால வரவு செலவு திட்டத்தில் கணிக்கப்பட்டதை விட 2 பில்லியன் டொலர் குறைவானதாகும்.

2027-28 நிதியாண்டுக்குள் சமச்சீர் வரவு செலவுத் திட்டங்களுக்கு மாகாணம் திரும்பும் என எதிர்பார்ப்பதாக நிதியமைச்சர் கூறினார்.

இந்த வரவு செலவு திட்டத்தில் $100,000 அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் ஒவ்வொரு பெரியவருக்கும் $500 ஒரு முறை கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட உதவும் முகமாக இந்த கையளிப்பு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் Girard கூறினார்.

2021 ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த பின்னர் , ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்த பணம் வைப்பிலிடப்படும்.

சுமார் 6.4 மில்லியன் Quebec மாகாண வாசிகள் இந்த தொகையை பெறுவார்கள்.

இந்த திட்டம் மாகாண அரசாங்கத்திற்கு மொத்தமாக 3.2 பில்லியன் டொலர்கள் செலவை ஏற்படுத்தும்.

Related posts

புதன்கிழமை ஆரம்பமாகும் Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம்

Lankathas Pathmanathan

ஞாயிற்றுக்கிழமை Conservative கட்சியின் தலைமைக்காக போட்டியிடுவதாக அறிவிக்கவுள்ள Patrick Brown!

Lankathas Pathmanathan

Markham நகரில் விபத்துக்குள்ளான விமானம்!

Lankathas Pathmanathan

Leave a Comment