பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டத்தை அதிகரிக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
கனடிய இராணுவம் சிறந்த உபகரணங்களுடன் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
கனடிய ஆயுதப் படைகளின் நடவடிக்கை குறித்து தான் பெருமையடைவயாக Joly கூறினார்.
அண்மையில் கனேடிய இராணுவத்தினர் உக்ரேனியர்களுக்கு பயிற்சி அளிப்பதையும், Latviaவில் NATO பணியை முன்னெடுத்துச் செல்வதையும் அமைச்சர் நேரடியாக பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.