கனடாவில் COVID தொற்றின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை அண்மிக்கிறது.
செவ்வாய்க்கிழமை (15) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 36,993 ஆக சுகாதார அதிகாரிகளால் பதிவானது.
செவ்வாய் மதியம் வரை பதிவான தரவுகளின் அடிப்படையில் தொற்றின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 99 சதவீதம் குறைவடைந்துள்ளது.
தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 25 சதவீதம் குறைவடைந்துள்ளது.
அதேவேளை இதுவரை தடுப்பூசி போடப்பட்ட கனடியர்களின் எண்ணிக்கை 85 சதவீதத்தை அண்மிக்கிறது.