British Colombia மாகாணம் பொது உட்புற இடங்களுக்கான முகமூடி கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை (11) நீக்குகிறது.
மாகாண பொது சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் அனைத்து உட்புற பொது இடங்களிலும் முகமூடிகள் தேவைப்படும் உத்தரவை மாகாணம் அகற்றும் என அறிவிக்கப்பட்டது.
COVID தடுப்பூசிக்கான ஆதாரம் அடுத்த மாதம் 8ஆம் திகதி நீக்கப்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.