உக்ரைனுக்கான மனிதாபிமான கூட்டணி குறித்து கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் கலந்துரையாடின.
நான்கு நாடுகளுக்கான பயணத்தின் ஆரம்பத்தில் திங்கட்கிழமை (07) இங்கிலாந்து பிரதமர் Boris Johnson, நெதர்லாந்து பிரதமர் Mark Rutte ஆகியோரை பிரதமர் Justin Trudeau இங்கிலாந்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கான தமது ஆதரவை மூன்று நாடுகளின் தலைவர்களும் வெளியிட்டனர்.
மனிதாபிமான உதவி தவிர கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் எவ்வகையிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்க முடியும் என்பது குறித்தும் விதித்தன.
கனடாவின் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் மேலும் 10 ரஷ்யர்களின் பெயர்களை திங்கட்கிழமை Trudeau சேர்த்துள்ளார்.
இந்தத் தடைகள் ரஷ்யாவின் தலைமையின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என Trudeau நம்பிக்கை தெரிவித்தார்.
திங்கட்கிழமை இங்கிலாந்தின் மகாராணியையும் Trudeau சந்தித்தார்.
திங்கள் மாலை Latvia சென்றடைந்த Trudeau செவ்வாய்க்கிழமை அங்கு NATO பொதுச் செயலாளர் Jens Stoltenbergகை சந்திப்பார்.
Latviaவில் NATO படைகளில் இணைந்து செயல்படும் கனேடியப் படையினரின் இராணுவ தளத்தையும் செவ்வாய்க்கிழமை Trudeau பார்வையிடுவார்.
இந்த வாரம் போலந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் Trudeau சந்திப்புகளை நடத்துவார்.
ஜேர்மனியில் நடைபெறும் சந்திப்பில் அவருடன் துணைப் பிரதமர் Chrystia Freeland இணைந்து கொள்ளவுள்ளார்.