தேசியம்
செய்திகள்

இரத்து செய்யப்பட்டன நாடாளுமன்ற அமர்வுகள்

Ottawaவில் தொடரும் காவல்துறையினரின் நடவடிக்கையின் காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நாடாளுமன்ற அமர்வுகள் இரத்து செய்யப்பட்டன.

இதன் காரணமாக வெள்ளியன்று இரண்டாவது நாளாகவும் தொடர இருந்த அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த விவாதமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அவசரகாலச் சட்டம் மீதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதம் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற அமர்வுகளை இரத்து செய்ய அனைத்துக் கட்சிகளும் வியாழன் இரவு ஒப்புக்கொண்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

சனிக்கிழமை விவாதத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் .

Related posts

Alberta விபத்தில் ஒருவர் பலி – 8 பேர் காயம்

Lankathas Pathmanathan

தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரிக்க புதிய சிறப்பு அறிக்கையாளர் நியமனம்

Lankathas Pathmanathan

காசாவில் உதவிப் பணியாளர்கள் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment