தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Candice Bergen பிரபலமான பெயருடன் கூடிய நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர். பிளவுபட்டுள்ள கட்சியில் பெரிதும் விரும்பப்படும் ஒருவர். Conservative கட்சியின் இடைக்கால தலைவர்.  எதிர்க்கட்சியில் தலைவர். குறிப்பாக சிறுபான்மை அரசாங்கத்தை கேள்விக்குப்படுத்த வேண்டிய உத்தியோகபூர்வ பொறுப்பில் (தற்காலிகமாக) உள்ளவர்.

ஒரு கொந்தளிப்பான, சர்ச்சைக்குரிய பதவிக் காலத்திற்குப் பின்னர், Erin O’Tooleலின் Conservative கட்சியின் தலைமை முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் Justin Trudeauவை பதவி நீக்கம் செய்ய முயன்ற கனரக வாகன ஓட்டுனர்களின் போராட்டம் Erin O’Tooleலின் பதிவியை பறித்து சென்றது.

Candice Bergen அவரது இடத்தைப் பிடித்துள்ளார்; நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இடைக்கால தலைவராக இருப்பார். புதிய தலைவரை தெரிவு செய்யும் மாநாடு எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. Stephen Harperரின் 2015 பொது தேர்தல் தோல்விக்குப் பின்னர் Rona Ambrose, ஒன்றரை ஆண்டுகள் இடைக்காலத் தலைவராக பணியாற்றினார் என்பதை இங்கு குறிப்பிடலாம்.

சரி, Candice Bergen என்பவர் யார்? – நொறுங்கும் கட்சியை ஒன்றாக இணைக்கும் பசை போல அவர் எவ்வாறு செயல்படுவார்?

அவர் ஒரு நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர்.

Bergen முதன் முதலில் 2008இல் நாடாளுமன்றத்திக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். Stephen Harper தலைமையில் Conservative கட்சிக்காக Manitoba மாகாணத்தின் Portage–Lisgar தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அன்றிலிருந்து அவர் அந்தத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றார். தவிரவும் தனது முதலாவது தேர்தலுக்குப் பின்னர் கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்தியும் வந்தார்.

Harper, 2013இல் அவருக்கு – சமூக மேம்பாட்டுக்கான மாநில அமைச்சர் (State for Social Development) என்ற துணை அமைச்சர் பதவியை வழங்கினார். முன்னாள் இடைக்காலத் தலைவரான Rona Ambrose, அவரை 2016 ஆம் ஆண்டு தனது நாடாளுமன்ற குழு தலைவராக (Opposition House Leader) நியமித்தார்.

2020 இல் Conservative கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் எண்ணம் Bergenனிடம் இருந்தது. ஆனால் அவரால் சரளமாக French பேச முடியாது என்பதால் இறுதியில் அந்த எண்ணத்தை கைவிட்டார். Erin O’Toole அந்த ஆண்டு தலைமைப் பதவியை வென்றார். Bergen கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது O’Toole பதவி விலத்தப்பட, Bergen அவரது பதவியை பெறுகிறார்.

Bergen பெரிய அரசாங்கங்களின் மீது வெறுப்பு கொண்ட கிராமப்புற (rural) நாடாளுமன்ற உறுப்பினர். அவர் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள Morden என்ற ஒரு சிறிய சமூகத்தைச் சேர்ந்தவர். Morden, தெற்கு Manitobaவின் ஒரு நகரமாகும். அவரது தந்தை வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்தார். தாயார் ஒரு மருத்துவமனையில் துப்பரவாளராக இருந்தார். Bergen 2000களின் முற்பகுதியில் Canadian Alliance கட்சியில் ஈடுபட்டார். அவர் இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் Portage–Lisgar தொகுதி, Portage–Lisgar உட்பட பல கிராமப்புற Manitoba சமூகங்களை உள்ளடக்கியது.

பெரும்பாலான Conservativeகள் அவரை விரும்புவதாகத் தெரிகிறது.

சமூக பழமைவாதிகள் (social conservatives) ஒரு புறம், மிதவாதிகள் (moderates) மறு புறம் என அவரது கட்சி கடுமையாக பிளவுபட்டிருக்கும் நேரத்தில் Bergen தலைமைப் பதவிக்கு வருகிறார். இந்த பிளவு அவரது முன்னோடியின் பதவி விலகளுக்கு வழிவகுத்தது. இவரை கட்சியின் தலைமைக்கு ஏற்றியது.

Bergen குறைந்தபட்சம் தற்காலிகமாக அந்த பிளவைக் குறைக்கக்கூடிய ஒருவராகத் தெரிகிறார். அவர் Prairies மாகாணங்களில் பிரபலமானவர். Andrew Scheer போன்ற சமூக பழமைவாதிகளுக்கும் Erin O’Toole போன்ற மிதவாதிகளுக்கும் பிடித்தவர். உறுதியான நிலைப்பாடு கொண்ட ஒரு சமாதான புறாவாகக் காணப்படுகிறார்.

அவருக்கு தற்போது கட்சி ஆதரவு உள்ளது. ஆனால் அடுத்த கட்சி மாநாட்டில் அவருக்குப் பதிலாக புதிய நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சியை கொண்டு நடத்தும் பணி அவருடையது. பல மிதவாத பழமைவாதிகள் (முன்னாள் இடைக்காலத் தலைவர் Rona Ambrose) உட்பட) Bergenனை ஒரு பாதுகாப்பான தேர்வாகக் கருதினாலும், அவரது சமூக பழமைவாதத்தின் (social conservatism) முன்னாள் நிலைப்பாடு கட்சிக்கு வெளியே குறிப்பிடத்தக்க பின்னடைவுக்கு வழிவகுத்தது.

அவர் சமூக ரீதியாக பழமைவாதி (socially conservative) – அது ஏற்கனவே அவரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

Bergenனின் புதிய பதவி தொடர்பான பெரும்பாலான ஊடக அறிக்கைகள், நாடளாவிய ரீதியில் குழப்பத்தை ஏற்படுத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு அவர் வெளிப்படையாக வழங்கிய ஆதரவு குறித்தே உள்ளது.

Bergen சர்ச்சைகளுக்கு புதியவர் இல்லை.

“Make America Great Again” (MAGA) என்ற தொப்பியுடன் Bergen இருக்கும் புகைப்படம் இணையத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொப்பி அணிந்திருப்பதைக் காட்டும் அவரது புகைப்படம் குறித்து Bergen அமைதியாகவே இருந்தார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trumpபின் MAGA முழக்கம் பலருக்கு, இனவெறி (racism), வெள்ளையின மேலாதிக்கத்தின் (white supremacy) அடையாளமாக மாறியுள்ளது. இதே Bergen, தற்போது கனடாவின் இரண்டாவது பெரிய கட்சியை தலைமை தாங்குகிறார்.

இதை Conservative கட்சியை தாண்டி கனடியர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள்?

Related posts

காட்டுக் கோழி – கனடிய தமிழ் குறும்படம் குறித்த ஒரு குறிப்பு

Lankathas Pathmanathan

COVID தொற்றும் பல்கலாச்சார ஊடகங்களும்

Gaya Raja

பாகம் 2 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan

Leave a Comment