தேசியம்
கட்டுரைகள் ராகவி புவிதாஸ்

2020: கனடிய அரசியல் நிலை என்ன?

முற்றிலும் ஓர் அரசியல் கண்ணோட்டத்தில் நோக்கினால், கனடாவில் தற்போது பதவியில் இருப்பவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது. 2020ஆம் ஆண்டில் இடம்பெற்ற மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும், பதவியில் இருந்த அனைவரும் பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

மேலும், Alberta மாகாணத்தின் சமீபத்திய எண்ணிக்கையைத் தவிர்த்துப் பார்த்தால், பெருந்தொற்றின் முதலாம், இரண்டாம் அலைகளில் மாகாண அரசாங்கங்கள் மீதான திருப்தி நிலை அதிகமாகவே உள்ளது. வசந்த காலத்தில், நாட்டில் மிக அதிகமான தொற்று விகிதத்தை Quebec மற்றும் Ontario மாகாணங்கள் கொண்டிருந்தாலும், முதல்வர்கள்  François Legault மற்றும்  Doug Ford ஆகியோர் தமது வாக்காளர்கள் மத்தியில் மிக அதிக திருப்திகரமான எண்ணிக்கையை (பல வாரங்களுக்கு 80 சதவீதத்திற்கு மேல்) கொண்டிருந்தனர்.

மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், பெருந்தொற்றை அரசாங்கம் கையாண்ட விதம் 2020 ஆம் ஆண்டு முழுவதும் திருப்திகரமாக இருந்தது. சமீபத்திய புள்ளி விபரங்கள் தேசிய அளவில் 66 சதவிகித திருப்தி வீதத்தைக் காட்டியுள்ளன. Alberta உட்பட நாட்டின் ஒவ்வொரு (வாக்குப்பதிவு) பிராந்தியத்திலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான விகிதங்களுடன், கட்சி சார்பு நிலைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு விகிதம் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு வாக்கெடுப்புகள் எங்களுக்கு கூறியவை என்ன?

March மாதத்தில் தொற்றுநோய் கனடாவின் எல்லைகளை அடைந்தபோது, Liberal அரசாங்கமும், தலைவர் இல்லாத Conservative கட்சியும் 2019 ஆண்டின் அவரவர் தேர்தல் முடிவு தரவுகளுடன் சிக்கிக் கொண்டிருந்தனர். விரைவில், Liberal அரசாங்கம் நாடெங்கும் முன்னிலை பெற்று, நிலையான இரட்டை இலக்க முன்னிலையுடன், வசந்த காலத்திலும் கோடை கால ஆரம்பத்திலும் அந்த வெற்றி அலையில் நீடித்திருந்தனர். ஆனால், July மற்றும் August மாதங்களில் இடம்பெற்ற WE அறக்கட்டளை ஊழல் / விவகாரம் ( அவரவர் பார்வையைப் பொறுத்து) Liberal அரசாங்கத்தை  கீழிறக்கியது. என்றாலும், Liberal அரசாங்கம் தேசிய அளவில் முன்னிலை வகித்தது. August முதல், Liberal கட்சியோ அல்லது Conservative கட்சியோ தமது ஆதரவுத் தளத்தில் குறிப்பிடத்தக்க எவ்வித நகர்வையும் மேற்கொள்ளவில்லை.

Liberal கட்சி வாக்களிப்பு நோக்கங்களில் (voting intentions), குறுகிய ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் முன்னிலையுடன் 2020ஆம் ஆண்டை நிறைவு செய்கின்றார்கள். இங்கு குறுகிய என குறிப்பிட்டதன் அர்த்தம் சராசரியாக Liberal கட்சியின் முன்னிலை தற்போது 6 புள்ளிகளே. எனவே, Conservative கட்சியின் ஆதரவாக ஒரு சாதாரண வாக்குப்பதிவு பிழை இடம்பெற்றால் கூட, முன்னறிவிக்கப்பட்டதை விட மிக நெருக்கமான போட்டியாக அது மாற்றிவிடக்கூடும்.

கனடிய பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul (The Narwhal/Christopher Katsarov Luna)

இருந்தாலும், பல காரணங்களுக்காக Liberal அரசாங்கத்தின் முன்னிலை முக்கியமானது. அவற்றுள், எதிர்வுகூறல்களின் பிராந்தியவாரியான விபரம் Liberal அரசாங்கத்திற்கே சாதகமாக உள்ளது. August மாதத்தில் Conservative கட்சி Erin O’Toole என்ற ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர்களால் கட்சிக்கு மிகவும் தேவைப்படும் இடத்துக்கு ஆதரவு தளத்தை நகர்த்த முடியவில்லை. Conservative கட்சி இன்னும் Ontarioவின் Liberal அரசாங்கத்தை 8 புள்ளிகள் சராசரியுடன் பின்தொடர்கின்றது. Quebecகில்  Liberal (37 சதவீதம்) மற்றும் Bloc Québécois ( 28 சதவீதம்) ஆகிய கட்சிகளுக்கு பின்னர் , 17 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது Conservative கட்சி.

கூடுதலாக, 2019 தேர்தலில் British Columbiaவில் Conservative கட்சி அதிக வாக்குகளை வென்றிருந்தாலும், மாகாணத்தில் அவர்களின் வாக்குப்பதிவு சராசரி தற்போது 26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது Liberal , NDP ஆகிய இரண்டு கட்சிகளுடனும் சமநிலையில் உள்ளதைக் குறிக்கிறது. Albertaவும் Prairiesசின் பெரும்பாலான பகுதிகளும் ஏற்கனவே Conservative கட்சிக்கு சாதகமாக உள்ள நிலையில், Conservative கட்சி ஒரு பொதுத் தேர்தலில் Liberal கட்சியை வெற்றிகொள்வதற்கு தேவையான தேர்தல் தொகுதிகளை எங்கே தேடுவார்கள்? Atlantic கனடாவும் Conservative கட்சிக்கு சிறிய அளவிலான வாய்ப்பினையே காட்டுகின்றது.

இருக்கை வாரியாக, Liberal கட்சியினர் சிறுபான்மையினராக அல்லது மிக மெலிதான பெரும்பான்மையினராக போதிய ஆதரவுடன் 2020ஆம் ஆண்டை நிறைவுக்குக் கொண்டு வந்தார்கள். தற்போதைய வாக்களிப்பு நோக்கங்கள் (voting intentions) உண்மையான வாக்குகளாக நோக்கப்பட வேண்டும். எதிர்வுகூறப்பட்ட மாதிரியில் (projection model) Liberal கட்சி சராசரியாக 168 இடங்களில் உள்ளனர். இது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 170 ஆசனங்களை விட சற்றே குறைவானது. Conservative கட்சியின் எதிர்வுகூறல் சராசரியாக 104 ஆசனங்களாக குறைவடைந்துள்ளது. இது July மாதத்திலிருந்து மிகக் குறைவான சராசரியாக பதிவாகியுள்ளது.

Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole (Conservative கட்சி)

NDP குறித்து: சமீபத்திய கருத்துக் கணிப்புகள் Decemberல் Jagmeet Singhகும் அவரது கட்சியும் முன்னேற்றப் பாதையில் இருப்பதைக் காட்டுகின்றன. NDP ஆண்டு முழுவதும் 15 முதல் 17 சதவிகித ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டிருந்த போதிலும் (அதன் 2019 தேர்தல் முடிவுடன் பொருந்தும்), மிகச் சமீபத்திய கருத்துக் கணிப்புகள் 19-23 சதவீதமான ஆதரவை அக்கட்சி பெற்றுள்ளதாக மதிப்பிட்டுள்ளன. இந்த சுமாரான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றம் தற்போதைய Liberal ஆதரவாளர்களிடமிருந்து அன்றி, Conservative மற்றும் பசுமை வாக்காளர்களிடமிருந்து வந்ததாகவே தெரிகின்றது. இந்த ஆரஞ்சு-நீலம் மற்றும் நீலம்-பச்சை வாக்காளர்கள் 2021இல் அவதானிக்கப்பட வேண்டியவர்களாக இருப்பார்கள்.

தற்போதுள்ள ஆதரவு நிலைகளின் அடிப்படையில் NDP பெறக்கூடிய ஆகக்கூடிய பெறுதி, ஆசனங்களின் அடிப்படையில் 40க்கும் அதிகமாகவோ 50க்கும்  குறைவாகவோ கூட இருக்கும். இது வெறும் புள்ளிவிபரக் குறைபாடா அல்லது 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஏற்படப் போகும் புதிய மாற்றமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். ஆயினும் கூட,NDPயின் தற்போது எதிர்வுகூறப்பட்ட சராசரி, தேசிய வாக்குகளில் 20 சதவீதமும் 36 ஆசனங்களுமாகும். இது 2020ஆம் ஆண்டில் கட்சி பெற்ற அதிகப் பெறுதியாகும்.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Jagmeet Singh (Wikimedia Commons)

Bloc Québécois கட்சியை பொறுத்தவரை, 2019ஆம் ஆண்டில் பெற்ற (32 சதவீதம், 32 ஆசனங்கள்) ஆதரவை 2020இலும் பேணி வந்துள்ளது. வசந்த காலத்திலும், கோடைகாலத்தின் பெரும்பகுதியிலும் நீடித்த Liberal அரசாங்கத்தின் ஆதரவின் அதிகரிப்பால் Bloc மூழ்கிவிடவில்லை. இலையுதிர் காலத்தில் Quebec மாகாணத்திற்காக  Erin O’Toole நேரத்தையும் முயற்சிகளையும் செலவிட்டிருந்தாலும் கூட, Conservative தலைமைத்துவத்திற்கு O’Toole வருகை Bloc Québécois கட்சியை பாதிக்கவில்லை. Quebec மாகாணத்தில், Bloc Québécois கட்சியும், Conservative கட்சியும் ஒரே மக்கள் தொகையியல் புள்ளிவிபரங்களைக் குறிவைக்கின்றன: கிராமப்புற அல்லது புறநகர் Quebecகில் வாழும் மென்மையான தேசியவாத வாக்காளர்களே அவர்கள். இந்த வாக்காளர்களில் பலரின் ஆதரவைப் பெறுவது Conservative கட்சிக்கும் O’Tooleக்கும் வெற்றியை மிகவும் எளிதாக்கும்.

Bloc Québécois சராசரியாக 28 ஆசனங்களுடன், மாகாணத்தில் 30 சதவீதத்துக்கும் குறைவான ஆதரவோடு 2020 ஆம் ஆண்டை நிறைவு செய்கின்றது. Yves-François Blanchet தனது முதல் பிரச்சாரத்தை இளவயதினரின் ஆதரவுடன் August 2019 நடுப்பகுதியில் ஆரம்பித்ததில் இருந்து, Quebecகில் தேர்தல் இரவில் ஒரு புள்ளி முன்னிலையுடன் நிறைவு செய்துள்ளார். வரவிருக்கும் வசந்த காலத்தில் பொதுத்  தேர்தல் நடைபெற்றால், Bloc Québécois ஆதரவாளர்கள் பலர் கட்சி தனது ஆதரவை மேலும் வளர்க்க முடியும் என நம்புகிறார்கள்.

Prime Minister Justin Trudeau arrieves for a news conference, Wednesday, July 8, 2020 in Ottawa. THE CANADIAN PRESS/Adrian Wyld

இறுதியாக, கூட்டாட்சி பசுமைக் கட்சி குறித்து: Toronto Centre தொகுதியில் (இடைத் தேர்தலில்) நாடாளுமன்றில் பொதுவாக Liberal கட்சிக்கு கிடைக்கக்கூடிய ஆசனத்திற்காக போட்டியிட்டு அதில் புதிய தலைவி Annamie Paul தோற்றார். ஆனால், அவர் 8,000க்கும் மேற்பட்ட வாக்குகளையும் மதிக்கத்தக்க 33 வாக்கு சதவீதத்தையும் பெற்றார். எவ்வாறாயினும், அவரது தலைமைத்துவ வெற்றி இதுவரை பசுமைக் கட்சிக்கு ஆதரவாக காய் நகர்த்தத் தவறிவிட்டது. அரசியல் அரங்கில் அதிகம் தெரிந்த முகமாக இல்லாமை அவரின் புகழுக்கு தடையாக இருக்கக்கூடும். வெல்லக்கூடிய புதிய தொகுதியைக் கண்டுபிடிப்பது 2021 ஆம் ஆண்டில் அவருக்கும் பசுமைவாதிகளுக்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

ராகவி புவிதாஸ்

(தேசியம் January 2021 சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Related posts

Julie Payette என்னும் வேதனையளிக்கும் பாடம் தலைவர்களின் தற்குறிப்பு களையல்ல – பண்புகளைப் பாருங்கள்

Gaya Raja

சவாலான காலத்தை எதிர்கொள்ளும் Andrea Horwath

Gaya Raja

எங்களில் பலருக்கும் தெரியாத கனடா!

thesiyam

Leave a Comment