December 12, 2024
தேசியம்
செய்திகள்

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கையொன்று வெளியிகியுள்ளது.

இரண்டாவது வாரமாக எதிர்ப்பு போராட்டங்கள் Quebec சட்டமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு சட்டமன்றத்தை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

தேசிய சட்டமன்றத்திற்கு எதிராக வன்முறைச் செயல்களை சிலர் திட்டமிடுவதாக முதல்வர் François Legault கூறினார்.

இதனை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவை முதல்வர் கோரியுள்ளார்.

காவல்துறையினர் இந்த வன்முறை அச்சுறுத்தல்களை தீவிரமாக கருதி கையாள்வதாக மாகாண பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மூன்று விமானங்களில் உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைத்து வர திட்டம்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ள பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள்

Gaya Raja

Leave a Comment